என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்த காட்சி.
நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கார்- அதிர்ஷ்டவசமாக 3 பக்தர்கள் உயிர்தப்பினர்
- தகவலறிந்ததும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ., தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
- சம்பவம் குறித்த ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
மதுரை பாண்டியன்நகர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது43). காமராஜர் சாலை தங்கம் நகரை சேர்ந்தவர் ஹரிஷ் (25). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலையில் மதுரையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டனர். மதுரை கே.கே. நகரை சேர்ந்த டிரைவர் அப்துல் ரஹீம் என்பவர் காரை ஓட்டினார்.
நேற்று மாலை திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு இவர்கள் இரவில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டனர். கார் சாகுபுரம் அருகே சென்றபோது காரின் முன் பக்க என்ஜினில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அவ ர்கள் உஷாரான அவர்கள் உடனடியாக காரை நிறுத்தினர்.
அப்போது காரில் தீப்பிடித்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு வெளியே வந்தனர். அடுத்த சில வினாடிகளில் காரில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த 3 பேரும் காயமின்றி தப்பினர்.
இது குறித்து தகவலறிந்ததும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ., தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்த ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






