என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜி.கே வாசன்
    X
    ஜி.கே வாசன்

    ஜி.கே.மணிக்கு ஜி.கே வாசன் வாழ்த்து

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க வில் சாதாரண உறுப்பினராக செயல்படத் தொடங்கி படிப்படியாக கடின உழைப்பால் உயர்ந்து தலைவர் ஸ்தானத்தை அடைந்தவர். கட்சியினருக்கு நம்பிக்கையும், ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவரின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. பா.ம.க.வின் வளர்ச்சிக்காக, தொண்டர்களின் உயர்வுக்காக, தமிழக மக்களின் நலன் காப்பதற்காக பா.ம.க வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆற்றும் பணிக்கு, தலைவராக ஜி.கே. மணி மேற்கொள்ளும் பணி மென்மேலும் வளர, சிறக்க, உயர-நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×