என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

  அதில் பேசிய நபர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாகவும், தற்போது வெளியே சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து தொலை பேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

  இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் தெரிவித்த செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.

  அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருந்துறை அடுத்த துடுப்பதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (வயது 36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

  Next Story
  ×