search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கேட்ட இடங்களை அ.தி.மு.க. தராததால் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வைர முத்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது நிருபர்களிடம் கூறிய எச்.ராஜா, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தி.மு. க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம் என்றார்.

    இந்த நிலையில் கேட்ட இடத்தை அ.தி.மு.க. ஒதுக்கி தராததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக பா.ஜ.க., அறிவித்துள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க., தலைவர் ராமசேதுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 3 ஒன்றிய வார்டு வீதம் பா.ஜ.க. வுக்கு ஒதுக்கித்தர வேண்டும் என அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் தருவதாக உறுதி அளித்த அ.தி.மு.க., நாட்கள் செல்ல செல்ல அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இதனால் விருப்ப மனு அளித்த பா.ஜ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 3-க்கு பதிலாக 1 இடத்தை ஒதுக்கி தருவதாக கூறினார். அந்த ஒன்றும் நாங்கள் போட்டியிட விரும்பாத இடமாக ஒதுக்கப்படும் என்பது தெரியவந்தது. இதை பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் ஏற்கவில்லை. மொத்தம் உள்ள 225 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களுக்கு சுமார் 200 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

    இதனால் தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தனித்து போட்டியிடும் முடிவை பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசித்து எடுத்துள்ளோம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வேட்பு மனுவை தாக்கல் செய்யுமாறு தொண்டர்களிடம் தெரிவித்து விட்டோம். இந்த முடிவு குறித்து பா.ஜ.க. மாநில செயலாளர் புரட்சி கவிதாசன் இன்று அறிவிப்பார் என்றார்.

    Next Story
    ×