என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.
    X
    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.

    திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி: சரத்குமார்

    தி.மு.க. அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று பூந்தமல்லி பகுதியில் நடந்த பிரசாரத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். #SarathKumar #ParliamentElections
    திருவள்ளூர் :

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைதியநாதன், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பூந்தமல்லியில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2 தினங்களுக்கு முன்பு எனது பிரசாரத்தை தொடங்கினேன். அ.தி.மு.க. கூட்டணி பற்றி உங்களுக்கு தெரியும். மத்தியில் வலுவான ஆட்சி என்ற அடிப்படையில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. புலவாமா தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் எதிர் தாக்குதல் நடத்தி அந்த அச்சத்தை போக்கியவர் பிரதமர் மோடி. அவருடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது முதல் வெற்றி.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுகிறார். 10 ஆண்டுகளாக பேசாத பிரதமரை வைத்துக்கொண்டு இருந்தவர்கள் தான் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர். காங்கிரஸ் காலத்தில் இருந்து கா‌‌ஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

    காங்கிரஸ், தி.மு.க.வால் அன்று தொடங்கிய காவிரி பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஈழப்படுகொலை நடந்தபோது ஒன்றாக இருந்தார்கள். தற்போது வைகோவும் ஒன்று சேர்ந்து விட்டார். இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி. எதிர் அணியில் பிரதமர் வேட்பாளர் இல்லை.

    ராகுல்காந்தி அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் மட்டும் தான் சொல்கிறார். 2 ஆண்டுகள் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார். #SarathKumar #ParliamentElections

    Next Story
    ×