என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்: டி.டி.வி.தினகரன் 11-ந்தேதி ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல்: டி.டி.வி.தினகரன் 11-ந்தேதி ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் வருகிற 11-ந்தேதி டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகிறது.

    அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதன் தோழமை கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டது.

    தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அவரது அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஒரு சில கட்சி தலைவர்களும் தினகரனுடன் பேசி வருகிறார்கள். தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டத்தை அ.ம.மு.க. ஏற்பாடு செய்துள்ளது.

    நாளை மறுநாள் (11-ந் தேதி) சென்னையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    டி.டி.வி. தினகரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டணியில் யார்- யாரை சேர்ப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. #LSPolls #AMMK #TTVDhinakaran
    Next Story
    ×