search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது சாதாரண வி‌ஷயமல்ல- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
    X

    அதிமுகவுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது சாதாரண வி‌ஷயமல்ல- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #admk #pmmodi

    மேலூர்:

    மேலூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மூவேந்தர் பண்பாட்டு கழகத்தில்நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பேசினர்.

    மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரல் வழியில் வந்த அ.தி.மு.க. இயக்கத்தை ஓ,பி.எஸ்., இ.பி.எஸ். வழி நடத்துகின்றனர். இயக்கத்தை அசைத்து விடலாம், குந்தகம் விளைவிக்கலாம் என சிலர் நினைத்து வருகின்றனர்.

    தற்போது வலுவான கூட்டணி அ.தி.மு.க. அமைத்து வருகிறது. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்பது போல கேட்காமல் கொடுத்து வரும் அரசு. அ.தி.மு.க. அரசு. ஸ்டாலின் என்றைக்கும் தி.மு.க.விற்கு தளபதியாக மட்டுமே தான் இருப்பார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைபெற்று வருகிறது.

    வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-2 முடித்த அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்து 2 அரை ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுடன் அகில இந்திய கட்சியான பா.ஜ.க இன்று கூட்டணி அமைத்திருக்கின்றனர். பா.ம.கவும் கூட்டணிக்கு வந்துள்ளனர்.

    எல்லோரிடத்திலும் திறமையான பிரதமர் என பெயர்பெற்ற மோடி அவர்கள் அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண வி‌ஷயமல்ல.

    வடமாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றிபெற்றவுடனே, கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

    ஆனால் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் அரசியல் ஆண்மை இருந்தால் அங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் சொல்லவில்லை.

    இரட்டை வேடம் ஸ்டாலின் போடுகின்றார். பணத்திற்காக ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் விலை போய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார்.

    தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் கொள்கையா? அ.தி.மு.க. என்றால் பணமா? மக்கள் சக்தி அ.தி.மு.க.விடமே உள்ளது என்று பா.ம.க முடிவு செய்துள்ளது.

    ஜெயலலிதா இருந்த போது பா.ம.க 1998, 2009-ல் கூட்டணி வைத்திருந்த போது தோல்வி ஏற்பட்டதாக தி.மு.க. கூறுகின்றனர்.

    ஆனால் வைகோ, பா.ம.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதா தான். சாக்கடை வசதி, மின்விளக்கு எரியாதது போன்றவை உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம் என ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கே இதற்கே காரணம். ஆனால் அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்.

    ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், விரகனூர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிசெழியன், நகர் செயலாளர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி,பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஜபார், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், பேருர் செயலாளர் மணிகண்டன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், முன்னால் கவுன்சிலர் சரவணக்குமார், அமைப்பு சாரா செயலாளர் அன்புச்செல்வம், பாசறை சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×