search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லைசென்சில் உரிமையாளரின் முகவரி இடம் பெற வழக்கு- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    லைசென்சில் உரிமையாளரின் முகவரி இடம் பெற வழக்கு- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தில் உரிமையாளரின் முகவரி இடம்பெறுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்போது ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புதிய முறை சென்னை உட்பட 3 மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாகன உரிமம் வழங்கும் போது அந்த உரிமத்தை பெறுபவர்களின் முகவரியை குறிப்பிடாமல், டிரைவிங் ஸ்கூல் முகவரியை குறிப்பிடுகின்றனர்.

    ஓட்டுநர் உரிமம் பெறும் நபரின் முகவரி இடம் பெறுவதில்லை. இதனால் பல பிரச்சனைகள் உருவாகும்.

    எனவே ஓட்டுநர் உரிமத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் பெயரைப் போடாமல், உரிமம் பெறுபவரின் முகவரி போட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர். #MadrasHC #SmartCardLicense #SmartCardDrivingLicense
    Next Story
    ×