என் மலர்

  செய்திகள்

  2 நாளில் திருமணம் - மணப்பெண்ணின் அண்ணன் மர்ம மரணம்
  X

  2 நாளில் திருமணம் - மணப்பெண்ணின் அண்ணன் மர்ம மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூர் அருகே மணப்பெண்ணின் அண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியாம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவருக்கு செல்வராஜ் (28) என்ற மகனும், வனிதா, ராஜேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.

  செல்வராஜ் ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது.

  செல்வராஜியின் தங்கை வனிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.

  இந்த நிலையில் செல்வராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி மல்லியகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது செல்வராஜ் உடல் அருகே ஈர துணி ஒன்று கயிறாக திரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

  இந்த ஈரதுணியால் அவரது கழுத்தை இறுக்கி யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார், அந்த ஈரதுணியை கைப்பற்றி, கைரேகை குறித்து கண்டுபிடிக்க தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

  இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

  கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஊரில் உள்ள கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக தீபா வந்திருந்தார்.

  அப்போது செல்வராஜூம் அந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது தீபாவை பார்த்தவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. தீபாவின் அழகில் மயங்கிய அவர், திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

  தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். தான் உன்னை காதலிப்பதாகவும், என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா? என செல்வராஜ் கேட்டார். அதற்கு தீபா சம்மதித்தார்.

  தேர் திருவிழாவின் போது சந்தித்த இருவரும் தொடர்ந்து இரண்டு நாட்கள் காதலித்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா பிரசவத்திற்காக கீரிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

  இதையடுத்து செல்வராஜ் நேற்று காலை கீரிப்பட்டிக்கு சென்று தனது தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. ஆகவே திருமணத்தை முன்னின்று நாம் நடத்த வேண்டும். எனவே குழந்தையுடன் வருமாறு கூறி தீபாவை அழைத்து வந்தார்.

  வீட்டிற்கு வந்ததும் செல்வராஜின் பெற்றோர் மகனின் 5 மாத குழந்தையை பார்க்க வேண்டி ஆசையுடன் எடுத்தனர். அப்போது கணவரிடம் தீபா நான் உங்கள் அப்பா, அம்மாவுடன் வீட்டில் வசிக்க மாட்டேன். தனியாக குடும்பம் நடத்துவோம் என்று கூறினார். குழந்தையையும் அவர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்தார்.

  மனைவி தகராறு செய்ததை தொடர்ந்து செல்வராஜ், தனி குடித்தனம் நடத்துவதற்காக அதே ஊரில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து நேற்று பால் காய்ச்சி அந்த வீட்டில் குடியேறினார்.

  இந்த நிலையில் இரவு அவர்களுக்கு வீட்டில் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் தீபா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இன்று காலையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு செல்வராஜ் பிணமாக கிடந்தார் என்பது தெரியவந்தது.

  இன்று காலை சகோதரிக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அண்ணன் இறந்ததால் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி சோகமாக மாறியது.

  போலீசார், தலைமறைவான தீபாவை தேடி வருகிறார்கள். #tamilnews
  Next Story
  ×