என் மலர்

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட சூர்யா
    X
    தற்கொலை செய்து கொண்ட சூர்யா

    திருப்பூரில் திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூரில் கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சூர்யா (19). இவர் முதலிப்பாளையம் சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் நவீன் குமார் (26) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி நவீன்குமார் - சூர்யா கடந்த மாதம் 5-ந்தேதி நண்பர்கள் முன்னிலையில் செங்கப்பள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நல்லூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

    பின்னர் நவீன் குமார்- சூர்யா தனிக்குடித்தனம் சென்றனர். அவர்களுடன் நவீன் குமார் தாய் காளீஸ்வரியும் குடியிருந்து வந்தார். சூர்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் 3 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளார்.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. வாய் தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று நவீன் குமார் வெளியில் சென்று விட்டார். வீட்டில் இருந்த சூர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று வீடு திரும்பிய நவீன் குமார் மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட சூர்யா தனது இடது கையில் கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் உன்னை விட்டு தனியாக பிரிந்து செல்ல மனமில்லை. நீயும் என்னுடன் வந்து விடு என எழுதப்பட்டு இருந்தது.

    சூர்யா தனது வங்கி பாஸ்புத்தகத்தில் மற்றொரு கடிதம் எழுதி இருந்தார். அதில் நவி மாமா. நீ பேசிய அந்த ஒரு வார்த்தையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் செல்கிறேன். என்னுடன் வந்து விடு என எழுதி உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×