search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுடன் நட்பு வைக்காமல் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்- நத்தம் விசுவநாதன் பேச்சு
    X

    சசிகலாவுடன் நட்பு வைக்காமல் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்- நத்தம் விசுவநாதன் பேச்சு

    சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார் என்று நத்தம் விசுவநாதன் பேசினார். #nathamviswanathan #sasikala #jayalalitha

    சின்னாளபட்டி:

    அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்து 47 -வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் கொடியேற்றி விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சின்னாளபட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. ஆத்தூர்ஒன்றிய செயலாளர் பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி, மாவட்ட செயலாளர் மருதராஜ், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோபி, முன்னாள மாவட்ட கவுன் சிலர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

    அறிஞர் அண்ணாவால் சுட்டிகாட்டப்பட்ட எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவால் வீருநடைபோட்டு தற்போது ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.

    100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை யாராலும் அழிக்க முடியாது. சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார். தி.மு.க.வில் செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு தலைவராக இருக்கும் தகுதி இல்லை. ஸ்டாலினுக்கு கொடுத்த தலைவர் பதவியை துரைமுருகனுக்கோ அல்லது ஐ.பெரியசாமிக்கோ கொடுத்திருக்கலாம்.

    இவ்வாறு நத்தம் விசுவநாதன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் அன்பழகன், வக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பேட்ரிக் பிரேம்குமார், எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் பாலு, அய்யம்பாளையம் பேரூர் இளைஞரணி செயலாளர் மவுலானா, ஒன்றிய மாணவரணி பொருளாளர் சுகன், ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் ராமுதாய், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #nathamviswanathan #sasikala #jayalalitha

    Next Story
    ×