என் மலர்
செய்திகள்

தோவாளை மார்க்கெட்டில் பிச்சி பூ கிலோ ரூ.1,100 ஆக உயர்வு
நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பிச்சி பூ கிலோ ரூ. 1, 100 க்கு விற்கப்படுகிறது.
ஆரல்வாய்மொழி:
தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்களில் இங்கு பூக்கள் பலமடங்கு விலை உயர்ந்து காணப்படும். தற்போது நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. தற்போது வரத்தை விட அதிக தேவை இருப்பதால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
அதிகபட்சமாக பிச்சிப்பூ இன்று கிலோ ரூ.1100-க்கு விற்பனை ஆனது. நேற்று பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டது. அதேபோல மல்லிகைப்பூ நேற்று ரூ.250 ஆக இருந்தது. இன்று ரூ.320-க்கு விற்பனை ஆனது.
அதேபோல சம்பங்கி ரூ.150, ரோஜா ரூ.150, மஞ்சள் கேந்தி மற்றும் சிவப்பு கேந்தி ரூ.180, அரளி ரூ.110, கொழுந்து ரூ.70, ஊட்டி ரோஜா ரூ.280க்கு விற்கப்பட்டது.
Next Story