என் மலர்
செய்திகள்

போடி அருகே இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மேலசொக்கநாதபும்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஜே.கே.பட்டி பகவதிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனபாக்கியம் (வயது 45). இவரது மகள் தேவி (19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருமலாபுரத்தைச் சேர்ந்த சரவணன் மகன் சத்தியமூர்த்தி (22) என்பவர் கடந்த சில வருடங்களாகவே தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சத்தியமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தேவி ஏலக்காய் விற்பனை நிலையத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிய தேவியிடம் சத்தியமூர்த்தி தன்னை காதலிக்குமாறு மிரட்டினார். அவர் மறுக்கவே தேவியை கடுமையாக தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தனபாக்கியம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.