என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தண்டவாளத்தில் தாய்-2 குழந்தைகளின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
கணவன் குடிபழக்கத்தால் விபரீதம்- 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
By
மாலை மலர்2 May 2018 5:24 AM GMT (Updated: 2 May 2018 5:24 AM GMT)

குடும்ப தகராறில் தாய் தனது 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அரையபுரம் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று 3 பேர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த கும்பகோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாபநாசம் தாலுகா இளங்கார்குடி கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மனைவி கலாவதி (வயது 35) என்பதும், அவரது மகன் ஹரிஹரன் (6), மகள் நிரஞ்சனா (4) ஆகியோர் தான் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 3 பேரும் மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
தாய், மகன், மகள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரமேஷ்குமார் தினமும் குடித்து விட்டு வந்து கலாவதியிடம் தகராறில் ஈடுபடுவாராம். இதனால் கணவன் மனைவி 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மனமுடைந்த கலாவதி நேற்று மகன் மற்றும் மகளை அழைத்து சென்று அரையாபுரம் ரெயில்வே தண்டாவளத்தில் ரெயில் முன்பு பாய்ந்தனர். இதில் 3 பேரும் இறந்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Next Story
×