என் மலர்
செய்திகள்

தண்டியாத்திரை நினைவு தினம்: வந்தே மாதரம் கோஷமிட்டு உப்பை அள்ளிய தியாகிகள் - பொதுமக்கள்
வேதாரண்யத்தில் தண்டியாத்திரை நினைவு நாளையொட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்புசத்தியாகிரக 88-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் பொது மக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யம் வடக்குவீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுகட்டிடத்திலிருந்து ஊர்வலமாக காங்கிரஸ் கட்சியினர், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் பொதுமக்கள் அகஸ்தியன்பள்ளிக்கு சென்றனர். வேதாரண்யத்தில் இருந்து 5 கிலோமீட்டர் நடந்து ஊர்வலமாக சென்ற காங்கிரசார் வழிநெடுகிலும் தேசப் பக்தி பாடல்களையும் வந்தே மாதரம் கோஷத்தையும் முழங்கி சென்றனர்.
பின்பு அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யத்தில் 1930 ஆண்டு நடைபெற்ற உப்புசத்தியாகிர போராட்டம் ராஜாஜி, சர்தார்வேதரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக உப்பு அள்ளும் போராட்டத்தை நடத்தினர். அதன் 88-ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், சர்தார் வேதரெத்தினத்தின் பேரன்கள் வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவு கமிட்டிபொதுச் செயலாளர் சக்தி.செல்வ கணபதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் சம்மந்தம்பிள்ளை துரைராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கணக்கோனர் ‘‘வந்தே மாதரம்’’ கோஷங்களை எழுப்பி உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story