என் மலர்
செய்திகள்

டெம்போ வேன் மீது மீன் லாரி மோதி விபத்து - திருப்பதி பக்தர்கள் 3 பேர் பலி
திருமலை:
சேலத்தை சேர்ந்த 12 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று இரவு டெம்போ வேனில் புறப்பட்டு சென்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பாகாலா செங்கம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் 1 மணியளவில் டெம்போ வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு மீன்களை ஏற்றி சென்ற லாரியும், டெம்போ வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
லாரியும், வேனும் நடுரோட்டில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதில் கண்மணி, லோகேஷ், வெங்கடாச்சலம் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாகாலா போலீசார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பாகாலா சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.