search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 PEOPLE DEATH"

    • சரக்கு வாகனம், பைக் மற்றும் தனியார் பஸ் மோதி 3 பேர் பலி.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விஜய்(25). இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். சக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த விஜய் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் வழியிலேயே விஜய் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சகோதரர் அஜித் அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜபாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணிக்கு செல்வதற்காக சின்னமனூர்- உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரவணக்குமாரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(70). தேவாரம்- போடி சாலையில் கோணம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மாரியப்பன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் பள்ளபட்டி சந்தை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது42). இவரது மகள் மவுபியா (12).
    • பண்ணப்பட்டி குடகனாற்றில் மவுபியா இறங்கி குளிக்க முயன்றப்போது நீரில் மூழ்கியுள்ளார்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் பள்ளபட்டி சந்தை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது42). தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் மகள் மவுபியா (12). அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது உறவினர் தெற்கு தெருவைச் சேர்ந்த ரியாஜுதீன் (38) ஜவுளித் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 3 பேர் உள்ளிட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் அம்மாபட்டியில் உள்ள கோரித்தோட்டத்தில் உள்ள தர்காவில் நேற்று வழிப்பாடு செய்தனர்.

    அதன்பின் எருமார்பட்டி அருகேயுள்ள பண்ணப்பட்டி குடகனாற்றில் மவுபியா இறங்கி குளிக்க முயன்றப்போது நீரில் மூழ்கியுள்ளார். அப்போது ஷேக்பரீத், ரியாஜுதீன் ஆகிய இருவரும் மவுபியாவை காப்பாற்ற நீரில் இறங்கியப்போது அவர்களும் நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து மூவரின் சடலங்களை மீட்டனர்.

    இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரில் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×