என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தை பாலைவனமாக்க மோடி முயற்சி செய்கிறார்- மு.க.ஸ்டாலின் தாக்கு
    X

    தமிழகத்தை பாலைவனமாக்க மோடி முயற்சி செய்கிறார்- மு.க.ஸ்டாலின் தாக்கு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தை பாலைவனமாக்க மோடி முயற்சி செய்கிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    கடவாச்சேரியில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம், ரெயில் மறியல், முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தினோம்.

    காவிரி பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தி வருகிறோம். 6-வது நாளாக இன்று காவிரி உரிமை மீட்பு பணயம் மேற்கொண்டுள்ளோம்.

    மத்தியில் ஆளும் மோடிக்கு எதிராக டெல்டா பகுதி விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒட்டு மொத்த தமிழகமே மோடி மீது கோபத்தில் உள்ளது.

    இன்று சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட திட்டமிட்டோம். தமிழகம் முழுவதும் மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்டப்பட்டது. தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

    நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்த போது தமிழகத்தில் கருப்பு கொடி காட்டினோம். அவர்களெல்லாம் அதை ஏற்றுக் கொண்டார்கள். பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி செய்தோம். ஆனால் அவர் சாலையில் வராமல் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். மோடி ஆகாயத்தில் பறந்தாலும் தேர்தலின் போது மக்களை சந்திக்க கீழே இறங்கிதான் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

    Next Story
    ×