என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி காளை முட்டியதில் வாலிபர் பலி
    X

    புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி காளை முட்டியதில் வாலிபர் பலி

    புதுக்கோட்டை அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் காளையின் உரிமையாளர் பலியானார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தாண்டீஸ்வரத்தில் சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அது போல் இந்தாண்டு திருவிழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் இலுப்பூர் குவாட்டுப்பட்டியை சேர்ந்த முத்து(வயது25) என்பவரின் ஜல்லிக்கட்டு காளையும் பங்கேற்றது.

    போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றன.

    முத்து தனது காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பாக வாடிவாசல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மற்றொரு காளை, முத்துவை, முட்டி தூக்கி எறிந்தது. இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே முத்து பலியானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    Next Story
    ×