என் மலர்

    செய்திகள்

    நடிகை சுருதி
    X
    நடிகை சுருதி

    திருமண ஆசை காட்டி இளைஞர்களிடம் மோசடி: நடிகை சுருதியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் திருமண செய்து கொள்வதாக கூறி இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை சுருதியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 21). இவர் வசதிபடைத்த இளைஞர்களிடம் திருமண ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்தார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பாலமுருகன் என்பவரிடம் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ரூ.45 லட்சம் மோசடி செய்தார்.

    இது குறித்து அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை சுருதி அவருக்கு உதவியாக இருந்த அவரது தாயார் சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் சுருதி உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கோவை ஜே.எம்.3 கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி சுருதி உள்பட 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Tamilnews
    Next Story
    ×