என் மலர்
செய்திகள்

தமிழக அரசு நிர்வாக திறமையின்மையால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது: எர்ணாவூர் நாராயணன்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அப்துல்ஹமீது தலைமையில் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். இதில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
காமராஜர் கொண்டுவந்த நீர்பாசன திட்டங்கள், கல்வித்திட்டங்களால் தான் இன்றளவும் தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை இது காட்டுகிறது. தமிழக அரசு நிர்வாக திறமையின்மையால் நிதி நெருக்கடியில் சிக்கி. ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ளது. அமைச்சர்களோ அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டிபோட்டு ஊழல் புரிந்து சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
நிலக்கரி இறக்குமதியில் ரூ.420 கோடி ஊழல் நடந்துள்ளது. தேனி மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு சாலை பணியே நடைபெறாமல் பணத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது என்றார்.
பின்னர் 2.31 கோடி வாசகர்களை கொண்ட தினத்தந்தி நாளிதழ் மற்றும் 30 லட்சத்து 74 ஆயிரம் வாசகர்களை கொண்ட மாலைமலர் நாளிதழ் ஆகியவற்றை பாராட்டினார். #tamilnews