search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலன் மாரிராமருடன் கைதான முத்துலெட்சுமி.
    X
    கள்ளக்காதலன் மாரிராமருடன் கைதான முத்துலெட்சுமி.

    கணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது

    கணவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மனைவியை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    முத்துலெட்சுமிக்கும், கடை உரிமையாளரின் மகன் மாரிராமர் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை இரு வீட்டாரும் கண்டித்தனர். இதனால் முத்துலெட்சுமி தனது கள்ளக்காதலனுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெள்ளமரத்துப்பட்டிக்கு 3 குழந்தைகளுடன் வந்து விட்டார்.

    தனது மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் பல இடங்களில் தேடிய செந்தில் ஒட்டன்சத்திரம் அருகே இருப்பதை அறிந்ததும் அங்கு வந்தார், பின்னர் தன்னுடன் வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் முத்துலெட்சுமி வர மறுத்ததோடு அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    செந்தில் மனைவியை வற்புறுத்தி அழைக்கவே அவரை கொலை செய்ய முத்துலெட்சுமி திட்டம் தீட்டினார். அதன்படி போலியம்மனூரில் உள்ள ஒரு தோட்டத்துக்கு அழைத்து வந்து தனது கள்ளக்காதலன் மாரிராமருடன் சேர்ந்து கொலை செய்தார்.

    பின்னர் தனது குழந்தைகளுடன் கடலூருக்கு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். கொலை நடந்து 8 மாதங்கள் கழித்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜாமீனில் வெளி வந்தனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர்கள் ஆஜராகவில்லை. அதன் பிறகு கோர்ட்டு பல முறை வாரண்டு பிறப்பித்தும் 7 ஆண்டுகளாக சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் இவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் மூலசத்திரம் பகுதியில் இவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×