என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
    X

    சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த சம்சுதீன் என்பவரை சோதனை செய்தபோது அவரது ஆடையிலும், சூட்கேசிலும் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது.

    அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அமெரிக்க டாலருக்கான ஆவணம் அவரிடம் இல்லை.

    இதையடுத்து சம்சுதீனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    Next Story
    ×