என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்தில் பெரிய மாற்றம் நடக்க போகிறது: மணிசங்கர் அய்யர் பேச்சு
    X

    தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்தில் பெரிய மாற்றம் நடக்க போகிறது: மணிசங்கர் அய்யர் பேச்சு

    இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் பெரிய மாற்றம் நடக்க போகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கள் அய்யர் பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கள் அய்யர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து அங்கு கொள்ளிடம் கிழக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பால சுப்பிரமணியம் தலைமை வகித்தார். வைத்தியநாதன் வரவேற்றார். முன்னாள் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் ஒரு வருடத்தில் பெரிய மாற்றம் வரப்போகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஒரு பலம் வாய்ந்த தூணாக இருந்து வருகிறது. நாம் அவர்களுடன் இருக்கிறோம். நம்முடைய பலம் எவ்வளவே இருக்குமோ அந்த பலத்தை அவர்களுடன் ஒன்று சேர்ந்து கொடுத்து வெற்றிபெற வேண்டும். 11 அல்லது 12 மாதங்களில் உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. வரும் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து கடவாசல் கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆணையை முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் வழங்கினார்.

    Next Story
    ×