என் மலர்
செய்திகள்

போலி மருத்துவர் துரையிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
அறந்தாங்கி அருகே பிளஸ்-2 படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஊசி போட்ட போலி டாக்டர் கைது
அறந்தாங்கி அருகே பிளஸ்-2 படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பெருங்காடு பகுதியில் சினேகா என்ற மெடிக்கல் இயங்கி வருகிறது. சங்கீதா என்பவரின் பெயரில் உரிமம் உள்ள இந்த மெடிக்கலை ஆவுடையார்கோவில் அருகே உள்ள வேட்டனூரைச் சேர்ந்த சின்னையா மகன் துரை (வயது 40) என்பவர் நடத்தி வருகிறார்.
பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ள துரை, அந்த மெடிக்கலுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவரைப் போல ஊசி போட்டும், குளுக்கோஸ் போட்டும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். முறையாக படிக்காமல் துரை அலோபதி மருத்துவரைப்போல சிகிச்சை அளித்து வருவது குறித்து சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின்பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில், மருந்து ஆய்வாளர் லெட்சுமணராஜ் உள்ளிட்டோர் பெருங்காடு வந்து, துரைக்கு சொந்தமான மெடிக்கலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் மெடிக்கலின் உள்புறம் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் கருவிகள் இருந்தன.

மேலும் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசிகள், தீர்ந்து போன குளுக்கோஸ் பாட்டில்களும் இருந்தன. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் துரையிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் மெடிக்கலுக்கு வரும் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவரைப் போன்று ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கொடுத்த தகவலின் பேரில் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் போலி மருத்துவர் துரையை போலீசார் கைது செய்தனர்.

மருந்துக்கடையின் பின்புறம் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அறைகள்.

Next Story