என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு
By
மாலை மலர்19 Oct 2017 10:01 AM GMT (Updated: 19 Oct 2017 10:01 AM GMT)

தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
பூந்தமல்லி:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவ மழை பொய்த்ததால் 4 ஏரிகளிலும் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. சோழவரம், புழல் ஏரிகள் முற்றிலும் வறண்டன.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் 4 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் தற்போது பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 295 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 90 கன அடி தண்ணீர் வருகிறது. 9 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி) ஏரிக்கு 52 கன அடி நீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்கு 52 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி நீர் உள்ளது. (மொத்த கொள்ளவு 881 மி.கனஅடி). ஏரிக்கு நீர் வரத்து இல்லை.
புழல் ஏரியில் 357 மில் லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி) ஏரிக்கு 23 கன அடி நீர் வருகிறது. குடிநீர் தேவைக்கு 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 52 மில்லியன் கன அடி (1 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 6 மாதத்துக்கு பின்னர் ஏரிகளில் நீர் இருப்பு 1 டி.எம்.சி.யை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×