என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது ரத்து: அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
By
மாலை மலர்12 Sep 2017 6:14 AM GMT (Updated: 12 Sep 2017 6:14 AM GMT)

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைப்புக்கு பாராட்டு தெரிவித்தும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
முன்னதாக, பொதுக்குழுவுக்கு தடை கோரி டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் நேற்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வரத்தொடங்கி விட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறிது நேரத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சுமார் 2,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,140 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்துக்கு வந்தனர்.
அழைப்பிதழை காண்பித்த பிறகே அவர்கள் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். அழைப்பிதழ் இல்லாத யாரும் உள்ளே
செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கில் போலீசார் குவிக்கப்பட் டிருந்தனர்.
முதலில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, 10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு அழைப்பிதழில், “தற்போது கழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு, ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக தேர்ந்து எடுத்தது ஆகியவற்றுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.க.வை வழி நடத்த கழக சட்ட திட்ட விதி 20(5)ன்படி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ராமன் - லட்சுமணன் போல் அதிமுகவை காப்பாற்ற முதல்வர் துணை முதல்வர் ஒன்றைணைந்துள்ளதை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழக அரசின் சார்பின் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்திவதற்கு பாராட்டு தெரிவித்தும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்னர் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள். கட்சிப்பொறுப்புகளில் புதியவர்களை நியமித்தும், பொறுப்பு வகித்து வந்தவர்களை நீக்கியும் டி.டி.வி தினகரன்
வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

Next Story
×