என் மலர்

    செய்திகள்

    தாம்பரம் அருகே விபத்து: பூ விற்கும் பெண்கள் 3 பேர் பலி
    X

    தாம்பரம் அருகே விபத்து: பூ விற்கும் பெண்கள் 3 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தாம்பரம் அருகே விபத்தில் பூ விற்கும் பெண்கள் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள குபேரன் கோவிலில் பூ விற்கும் பெண்கள் 9 பேர் இன்று அதிகாலை லோடு ஆட்டோவில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சென்றனர்.

    லோடு ஆட்டோவை ராஜசேகர் என்பவர் ஓட்டினார். ஆட்டோ உரிமையாளர் மணிகண்டன் உடன் சென்றார்.

    காலை 5 மணிக்கு மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. குன்றத்தூர் அருகே துரைபாக்கத்தில் சாலையோர சிமெண்ட் கலவை லாரி நின்று கொண்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது.

    இதில் ஆட்டோ பின்புறம் அமர்ந்திருந்த பெண்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். டிரைவர் ராஜசேகர், மணிகண்டன் ஆகியோரும் காயம் அடைந்தனர். சுஜாதா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தமிழ் அரசி, வசந்தி ஆகியோர் இறந்தனர்.

    அம்மலு, முத்தழகி, ராஜேஸ்வரி, டில்லிமா, பொன்னி, டிரைவர் ராஜேசேகர், மணிகண்டன் உள்பட 8 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிமெண்ட் கலவை லாரியை சாலையோரம் நிறுத்திருந்த நாமக்கல்லைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×