என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம்: அன்புமணி ராமதாஸ்
By
மாலை மலர்11 July 2017 5:50 PM GMT (Updated: 11 July 2017 5:50 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் போராட்டம் நடத்தி தீர்ப்போம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி அருகே இண்டூரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தை அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட இண்டூரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் பா.ம.க., அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இண்டூரில் புதிய பஸ் நிலையம் கட்டவேண்டும் என்பது, 20 ஆண்டுகால கோரிக்கையாகும். தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்லக்கூடிய முக்கிய வழிதடமாக உள்ளதால் தினசரி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அதேபோல் ஆண்டுதோரும் பல உயிர்கள் இழக்கக்கூடிய ஒரு சூழல் இருந்தது.
இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், நான்குவழி சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பஸ் நிலையம் என்னால் தொடங்கப்பட்டதை விட இப்பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது தான் மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் இந்த மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. முக்கியமாக நீர்பாசன திட்டம் உள்ளது. இதில் தும்பலஅள்ளி அணை, நாகவதி அணை, பஞ்சப்பள்ளி அணை என மாவட்டத்தில் உள்ள பத்து அம்ச திட்டத்துக்கு மொத்தம் ரூ. 400 கோடி இருந்தால் போதுமானது. ஆனால் இத்திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும் என திட்டமிடுகின்றனர்.
மேலும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை ஒரு தொழிற்சாலைகள் கூட அமைக்கமுடியாத அரசாக இந்த அரசு உள்ளது. இனி வெத்து அறிவிப்புகளை நாங்கள் எடுத்து கொள்ள மாட்டோம். இதற்காக இனி நாங்கள் போராட்டம் நடத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திறப்பு விழாவில் வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, அரசுத்துறை அதிகாரிகள் விஜயலட்சுமி, ஜெயந்தி, அமரவேல் மற்றும் பா.ம.க. கட்சியை சேர்ந்த மாநில துணை பொதுசெயலாளர் சாந்த மூர்த்தி, மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
×