என் மலர்
செய்திகள்

நளினி-முருகன்
வேலூர் ஜெயிலில் 3 மாதங்களுக்கு பிறகு நளினி- முருகன் சந்திப்பு
வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை 3 மாதங்களுக்கு பிறகு, இன்று காலை 7.50 மணியளவில் முருகன் சென்று சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி முருகன், வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.
கோர்ட்டு உத்தரவுப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியை முருகன் சந்தித்து அரைமணி நேரம் பேசி வந்தார். இந்த நிலையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் அறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் சிக்கியது.
இதையடுத்து, மனைவி நளினி உள்பட பார்வையாளர்களை சந்திக்க முருகனுக்கு சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்தது. செல்போன் பறிமுதல் வழக்கு விசாரணை, வேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முருகனை சந்திக்க அவரது தாயார் சோமணி வெற்றிவேல் பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் சிறைத்துறை விதித்த 3 மாத தடை உத்தரவு நீங்கியது.
இதையடுத்து, பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை 3 மாதங்களுக்கு பிறகு, இன்று காலை 7.50 மணியளவில் முருகன் சென்று சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது.
பின்னர், 8.20 மணிக்கு மீண்டும் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு முருகன் அடைக்கப்பட்டார். வேலூர் டவுன் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையில் போலீசார் அழைத்து சென்றனர்.

Next Story