என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை மறந்து விட்டார்: அய்யாக்கண்ணு வேதனை
    X

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை மறந்து விட்டார்: அய்யாக்கண்ணு வேதனை

    டெல்லியில் போராடிய போது அங்கு வந்த முதல்- அமைச்சர் விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று சொல்லி அழைத்து சென்றார். ஆனால் இப்போது விவசாயிகளை மறந்து விட்டார் என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்கபா மைதானத்தில் நடந்த நதிநீர் இணைப்பு மாநாட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுக்க தமிழகத்தின் தளபதியும், கொங்கு மண்டல தளபதியும் இங்கு வந்திருக்கிறார்கள். விவசாயிகளை வாழ வைப்பதற்காக வந்திருக்கிறார்கள். உண்மையிலேயே விவசாயிகள் சந்தோ‌ஷமாக உள்ளனர்.

    லட்சக்கணக்கான டி.எம்.சி. தண்ணீர் வங்க விரிகுடா கடலிலும், அரபிக் கடலிலும் கலக்கிறது. அந்த தண்ணீரை திருப்பி விட்டால் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலம் செழிக்கும். அதற்கு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாங்கள் டெல்லியில் ஏன் போராடினோம். கொங்கு மண்டலம் தானே அந்த காலத்திலேயே வளமையான விவசாயிகள் கொண்ட மண்டலமாக இருந்தது. விவசாயிகளை யாரும் கண்டு கொள்ளாததால் தான் கருணாநிதி 7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.

    இப்போது விவசாயிகளை ஆங்கிலேயர் ஆட்சி போல் துண்டாடுகின்றனர். இது நியாயமா? நாங்கள் டெல்லியில் போராடிய போது அங்கு வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று சொல்லி அழைத்து சென்றார். ஆனால் இப்போது விவசாயிகளை மறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×