என் மலர்

  செய்திகள்

  நீலகிரி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் உத்தரவு
  X

  நீலகிரி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி முள்ளூர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
  சென்னை:

  தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜக்கனாரை கிராமம், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த மேக்ஸிகேப் வாகனம் 26.5.2017 அன்று முள்ளூர் என்ற இடத்திற்கு அருகே கட்டுப்பாட்டினை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், யோகராஜ் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், முகுந்தன் என்பவரின் மகன் பாஸ்கரன், முகுந்தன் என்பவரின் மகன் சங்கர் மற்றும் முகுந்தன் என்பவரின் மனைவி மல்லிகா, மாரி என்பவரின் மனைவி சரோஜா ஆகிய ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான்  மிகவும் துயரம் அடைந்தேன்.
   
  இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த சாலை விபத்தில் 5 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவரும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.    

  இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×