என் மலர்

  செய்திகள்

  போராட்டம் நடத்தி ஏழை, எளிய மக்களை மருத்துவர்கள் தண்டிக்கவேண்டாம்: தமிழிசை
  X

  போராட்டம் நடத்தி ஏழை, எளிய மக்களை மருத்துவர்கள் தண்டிக்கவேண்டாம்: தமிழிசை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போராட்டம் நடத்தி ஏழை, எளிய மக்களை மருத்துவர்கள் தண்டிக்க வேண்டாம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  சென்னை:

  தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த மருத்துவர் உயர் கல்வி பட்ட மேற்படிப்புக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானது வருத்தமளிக்கிறது.

  அதற்கு உரிய சட்ட பூர்வமான நடைமுறைகளை அரசு மருத்துவர்கள் சங்கமும் தமிழக அரசின் மூலமாகவும் ஈடுபடுவது தானே சரியான நடைமுறையாக இருக்க முடியும்.

  நீதிமன்ற ஆணையை மெத்த படித்த மருத்துவர்களே புரிந்து கொண்டு ஏற்க மறுத்து தெருவில் இறங்கி கொடூரமாக ஏழை எளிய நோயாளிகளின் உயிரை முன்னிறுத்தி போராடுவது என்ன நியாயம்? உங்கள் உயர் படிப்பு, இட ஒதுக்கீடு ரத்தானதற்கு அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் எந்த விதத்தில் பொறுப்பாவார்கள்?

  மருத்துவர்களின் போராட்டம் மற்றவர்களின் போராட்டத்திலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டாமா? தூங்கி போராட்டம் நடத்துவது குண்டூசியில் ரத்தம் சிந்தி போராடுவதும் மருத்துவம் படிக்க வந்த மாணவர்களை படிக்கவிடாமல் அழைத்து வந்து போராடுவது அரசு மருத்துவர் சங்கம் கம்யூனிஸ்ட்டுகளின் பிடியில் சென்று விட்டதைக் காட்டுகிறது.

  நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சட்டப்படி மீண்டும் கிடைக்கச்செய்ய உங்களை தினமும் வாழ்த்தி மத்திய அரசையும், மோடியையும் வசை பாடிச் செல்லும் தமிழக தலைவர்களால் திசைமாறாதீர்கள் என்று வேண்டுகிறேன்.

  ஏழை எளிய அரசு மருத்துவமனை நோயாளிகளை டாக்டர்கள் வதைப்பதுதான் சமூக நீதியா? மருத்துவர்களான உங்களை கடவுளாக நம்பும் ஏழை, எளிய மக்களை உங்கள் உயர்கல்வி என்ற சுயநலத்திற்காக ஏன் தண்டிக்கிறீர்கள்.

  மருத்துவ உயர் கல்வி படிப்பு நோயாளிகளின் உயிரை காப்பாத்துவதுதானே? அவர்களின் உயர் பலி வாங்கி உங்களுக்கு உரிமை கோருவது நியாயமா? சிந்திக்க வேண்டும். உங்களின் உயர்கல்வி சுயநலத்திற்காக அரசு மருத்துவமனையில் ஏழைகள் மடிய வேண்டுமா?

  நோயாளிகளை பரிதவிக்க விடுவது மருத்துவ தொழில் தர்மத்திற்கு எதிரானது. ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் நோயாளிக்கு தரவேண்டிய சிகிச்சையை எக்காரணத்திற்க்கொண்டும் எவருக்கும் தர மறுக்க மாட்டேன் என்பது தான். ஒவ்வொரு மருத்துவரும் ஹிப்போ கிரடிஸ் உறுதி மொழிக்கு எதிரானது அல்லவா?

  ஆகையால் தமிழக முதல்- அமைச்சரும், சுகாதார துறை அமைச்சரும் தலையிட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய சாமானிய மக்களின் உயிர்கள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் மருத்துவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×