என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. பந்துவீச்சு தேர்வு
- 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது.
முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவை 81 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (19.4 ஓவர்) நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவவிட்டது.
இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
இன்று மதியம் இன்றைய ஆட்டம் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்க உள்ளது.






