என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    IND vs PAK போட்டியில் உஸ்மான் தாரிக் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் - பாகிஸ்தான் கேப்டன்
    X

    IND vs PAK போட்டியில் உஸ்மான் தாரிக் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் - பாகிஸ்தான் கேப்டன்

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
    • இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.

    இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.

    இன்றைய போட்டியில் பாகிச்தன் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்நிலையில், உஸ்மான் தாரிக் குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "பாகிஸ்தான் அணியில் உள்ள 15 வீரர்களில் உஸ்மான் தாரிக்கும் ஒருவர். நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

    அவரது பந்துவீச்சு குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. எங்கள் அணியின் முக்கிய துருப்புச் சீட்டு என அவரை கூறலாம்.

    ஐசிசியின் விதிமுறைக்கு உட்பட்டே அவரது பந்து வீச்சு இருக்கிறது. இருப்பினும் அவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு அதிகம் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×