என் மலர்
நீங்கள் தேடியது "சல்மான் அலி ஆகா"
- நமீபியா உடனான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது.
- இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போட்டியில் அதிரடியாக விளையாட முயன்ற சல்மான் அலி ஆகா, 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியதும், அவரது ஷாட் தேர்வைக் குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏதோ கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சத்தில் அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தார். இந்த காட்சிகள் நேரலையில் கேமராக்களில் பதிவாகின.
ஏற்கனவே இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த நமீபியா போட்டி அவர்களுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது. இந்த அதீத அழுத்தமே இத்தகைய மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
இந்த சம்பவத்தின் போது முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அருகே அமைதியாக அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
- இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், உஸ்மான் தாரிக் குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "பாகிஸ்தான் அணியில் உள்ள 15 வீரர்களில் உஸ்மான் தாரிக்கும் ஒருவர். நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அவரது பந்துவீச்சு குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. எங்கள் அணியின் முக்கிய துருப்புச் சீட்டு என அவரை கூறலாம்.
ஐசிசியின் விதிமுறைக்கு உட்பட்டே அவரது பந்து வீச்சு இருக்கிறது. இருப்பினும் அவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு அதிகம் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
- சமீப காலங்களில் ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னால் பணிந்து போன விதத்தை பார்க்கும் போது, யாராவது ஒருத்தர் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
- உலக கிரிக்கெட்டின் பரந்த நலன்களுக்காக எந்தப் பாதையை எடுக்க விரும்புகிறது என்பதை ஐ.சி.சி இப்போது முடிவு செய்ய வேண்டும்
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரசு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதை வீரர்கள் பின்பற்றுவார்கள் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்த உடனேயே அணி மேலாளரால் வீரர்களுக்கு இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதாக சல்மான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "நாங்கள் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள், எங்கள் அரசாங்கமும் வாரியமும் எந்த முடிவை எடுத்தாலும், அனைத்து வீரர்களும் அதற்கு உடன்படுவோம்" என தெரிவித்தார். "எங்களுக்கு இன்னும் மூன்று குழு போட்டிகள் உள்ளன, எனவே அவை அனைத்தையும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முயற்சிப்போம்," என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்கும் முடிவுக்கு ஷாஹித் அப்ரிடி, முகமது யூசுப் மற்றும் ரஷீத் லத்தீப் போன்ற முன்னாள் கேப்டன்களும், மொயின் கான், சர்பராஸ் அகமது மற்றும் மொஹ்சின் கான் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'சமீப காலங்களில் ஐசிசி வங்கதேசத்திற்கு செய்த காரியங்கள் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னால் அவர்கள் பணிந்து போன விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, யாராவது ஒருத்தர் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று லத்தீப் கூறியுள்ளார்.
அரசியலை விளையாட்டோடு கலப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லாததால், பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாதது ஏமாற்றமளித்ததாகவும், ஆனால் அந்த முடிவுக்கான காரணங்களை தான் புரிந்துகொண்டதாகவும் அஃப்ரிடி கூறியுள்ளார். உலக கிரிக்கெட்டின் பரந்த நலன்களுக்காக எந்தப் பாதையை எடுக்க விரும்புகிறது என்பதை ஐ.சி.சி இப்போது முடிவு செய்ய வேண்டும் என்று மொயின் கூறினார்.
முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






