என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: புதிய சாதனை ஆர்வத்தில் இந்தியா
    X

    டி20 உலகக் கோப்பை: புதிய சாதனை ஆர்வத்தில் இந்தியா

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
    • 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த 2 சாதனையும் படைக்கும் ஆர்வத்தில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் இதுவரை அதிகபட்சமாக தலா 2 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன. தற்போது இந்தியா 3-வது தடவையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை நடப்பு சாம்பியன் இறுதிப்போட்டிக்கு வந்தது இல்லை. முதல் முறையாக இந்திய அணி அந்த பெருமையை பெற்றுள்ளது. 31-வது மோதல்

    இரு அணிகளும் நாளை மோதுவது 31-வது போட்டியாகும். இதுவரை நடந்த முப்பது 20 ஓவரில் இந்தியா 18-ல், நியூசிலாந்து 11-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றது.

    Next Story
    ×