என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சஞ்சு சாம்சன்
- அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை.
- இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ளுவரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.






