என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தோனி, ரோகித் வரிசையில் சூர்யகுமார் யாதவ் #T20WorldCup வெல்வாரா?
- இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ்.
- நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பை யை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா - சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2024-ல் சாம்பியன் பட்டம் கிடைத்தது. 4-வது தடவை யாக இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இந்த 2 சாதனையும் படைக்கும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பை யை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. 2-வது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளும் உலக கோப்பையை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உலக கோப்பையை வென்று கபில்தேவ், தோனி, ரோகித் சர்மா வழியில் சூர்ய குமார் யாதவ் இணைவாரா? என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு அவர் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
அவருக்கு அடுத்தப்படி யாக தோனி உலக கோப் பையை கைப்பற்றினார். 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் வென்று கொடுத்தார். இதை தவிர 2013-ல் தோனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்றுக் கொடுத்தார்.
2024-ல் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. அதோடு அவர் 2025-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்று கொடுத்தார்.
2002-ல் இந்தியாவும், இலங்கையும் இணைந்து சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. இந்த அணிக்கு கங்குலி கேப்டனாக இருந்தார்.






