என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்: டிராவிட்டை முந்தினார் ஸ்டீவன் சுமித்
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது.
இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 2 கேட்ச் செய்தார். இதனால் டெஸ்டில் அவரது கேட்ச் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் டெஸ்டில் அதிக கேட்ச் செய்த பீல்டர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ராகுல் டிராவிட்டை (210 கேட்ச்) பின்னுக்குத் தள்ளினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (214) உள்ளார்.
Next Story






