என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தோல்வியே காணாத தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன்- டெம்பா பவுமா வரலாற்று சாதனை
    X

    தோல்வியே காணாத தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன்- டெம்பா பவுமா வரலாற்று சாதனை

    • பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கெல்டன் 259 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 194 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது. 421 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 122.1 ஓவர்களில் 478 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 58 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    சிறிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை டெஸ்ட்டில் தோல்வியே கண்டதில்லை. அவரது கேப்டஷிப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 9 டெஸ்ட்டில் விளையாடி உள்ளது. இதில் 8-ல் வெற்றியும் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்ட்டில் முதல் தோல்விக்கு முன் அதிக வெற்றிகளை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் என்ற மாபெரும் சாதனையை பவுமா படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஹசிம் அம்லா 2-வது உள்ளார். இவர் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வியும் அடைந்ததில்லை. இந்த சாதனையை பவுமா (9 போட்டிகள்) முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×