என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மாவுடனான தற்போதைய உறவு குறித்து மனம் திறந்த சுப்மன் கில்
- இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 7 மாதங்களுக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடரின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக கில் களமிறங்குகிறார். மேலும் 7 மாதங்களுக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட உள்ளதால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய கேப்டன் கில்லிடம் ரோகித்தின் உறவு எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கில் கொடுத்த பதில்:-
வெளியில் நடக்கும் கதை வேறு. ஆனால் இப்போது எங்கள் உறவில் எந்த வித்தியாசமும் இல்லை. நாங்கள் முன்பு போலவே இருக்கிறோம். எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர் மிகவும் உதவியாக இருக்கிறார்.
நான் அவரிடம் ஏதாவது கேட்க விரும்பினால், நான் அவரிடம் சென்று அவரது கருத்தைக் கேட்பேன்.
அத்தகைய சூழ்நிலையில் அவர் என்ன செய்திருப்பார் என்று கேட்பேன். அனைவரின் எண்ணங்களையும் நான் பெற விரும்புகிறேன். பின்னர் விளையாட்டைப் பற்றிய எனது புரிதலின் அடிப்படையில், இறுதி முடிவை எடுக்க விரும்புகிறேன்.
இவ்வாறு கில் கூறினார்.






