என் மலர்
கிரிக்கெட் (Cricket)

#IPL2026 சிஎஸ்கே அணியில் சாம்சன் இணைந்ததால் அந்த பிரச்சனை தீரும்- பியூஷ் சாவ்லா
- சஞ்சு சாம்சன் தனியாகவே ஒரு போட்டியை வெல்லக்கூடிய வீரர்.
- ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சாம்சன் நல்ல பார்மில் இருப்பது சென்னை அணியின் ரசிகர்களுக்கு நல்ல செய்தி.
ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ம் தேதி தொடங்க உள்ளது. மாநிலத் தேர்தல்கள் காரணமாக இதுவரை முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகி உள்ளது. சென்னை அணி தனது முதல் போட்டியை 30-ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக கவுகாத்தியில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா, சென்னை அணியின் சஞ்சு சாம்சன் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சஞ்சு சாம்சன் தனியாகவே ஒரு போட்டியை வெல்லக்கூடிய வீரர். டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி விமர்சனங்கள் தவறு என நிரூபித்தார்.
மேலும், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சாம்சன் நல்ல பார்மில் இருப்பது சென்னை அணியின் ரசிகர்களுக்கு நல்ல செய்தி. சென்னை மைதானத்தில் பிட்சின் தன்மை சாம்சனின் ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்றும், தொடக்க வீரராக அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பெரும் பலன் தரும்.
கடந்த சீசனில் பவர் பிளேயில் வேகமாக ரன்கள் எடுக்க முடியாமல் சென்னை அணி சிரமப்பட்டதாகவும், ஆயுஷ் மஹாத்ரே வந்த பிறகே தொடக்கத்தில் ரன்கள் வரத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். தற்போது சாம்சன் இணைந்ததால் தொடக்க ஜோடி பிரச்சினை தீரும் என்றும் தெரிவித்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது. ஆனால் இந்த முறைவலுவான அணியை அமைத்துள்ளதால், ஆறாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.
ஐபிஎல் 2026 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டிவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மஹாத்ரே, கார்த்திக் சர்மா, சர்பராஸ் கான், உர்வில் படேல், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், அமன் கான், சாக் போல்க்ஸ், சிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சௌதரி, நேதன் எலிஸ், ஸ்ரேயஸ் கோபால், குர்ஜப்நீத் சிங், அகீல் ஹோசைன், மேட் ஹென்றி, ராகுல் சஹார்.






