என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பா?: பாகிஸ்தான் கேப்டன் பதில்
- இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
- ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றார்.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது. இந்திய அணி நாளை துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறதே என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சல்மான் ஆகா, டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் ஃபேவரிட் என நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு மணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என தெரிவித்தார்.
Next Story






