என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    IPL 2026 | ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா ஹேசில்வுட்? வெளியான அப்டேட்
    X

    IPL 2026 | ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா ஹேசில்வுட்? வெளியான அப்டேட்

    • கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல ஹேசில்வுட் மிக முக்கியக் காரணமாக இருந்தார்.
    • அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது.

    இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

    காயம் காரணமாக அவர் சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவக் குழுவிடமிருந்து 'பிட்னஸ் சான்றிதழ்' கிடைத்தால் மட்டுமே அவர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியும்.

    கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல ஹேசில்வுட் மிக முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் இல்லாத பட்சத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சுத் துறை பலவீனமடைய வாய்ப்புள்ளது.

    இதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவரும் மருத்துவ அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×