என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஹர்லின் தியோல் அதிரடி: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது உ.பி.
    X

    ஹர்லின் தியோல் அதிரடி: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது உ.பி.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

    நாட் ஸ்கீவர் பிரண்ட் 65 ரன்னில் அவுட்டானார். அமன் ஜோத் கவுர் 38 ரன்னும், நிகோலா கேரி 32 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களமிறங்கியது. மெக் லானிங் 25 ரன்னும், கிரன் நவ்கிரே 10 ரன்னும், லிட்ச் பீல்டு 25 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்லின் தியோல் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னும், சோலே டிரியான் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், உ.பி. வாரியர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    Next Story
    ×