என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை: Wide-ல் பும்ராவை OverTake செய்த ஷர்துல் தாகூர்
- ஜஸ்பிரித் பும்ரா (2015), முகமது சிராஜ் (2023) கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
- மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 234 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 13-வது ஓவரில் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர். இதில் தாக்குரின் பங்களிப்பு மட்டும் 8. ஒரு இன்னிங்சில் அதிக வைடு போட்ட மோசமான பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
மேலும் அவர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார். தேஷ்பாண்டே எல்எஸ்ஜிக்கு எதிராகவும் சிராஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது.






