என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    அதிக வெற்றி பெற்ற கேப்டன்: வார்னே சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்
    X

    அதிக வெற்றி பெற்ற கேப்டன்: வார்னே சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சண்டிகர்:

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி பெற்ற 32-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    Next Story
    ×