என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மிரட்டல் பந்து வீச்சு: மும்பையை 155 ரன்களுக்குள் அடக்கிய குஜராத்
- மும்பை அணியின் வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- ரிக்கெல்டன் களமிறங்கினர். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரிக்கெல்டன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வில் ஜாக்ஸ் முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் ஆனார். தடுமாறிய ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் விளாசினார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் திலக் வர்மா 7, பாண்ட்யா 1, நமன் தீர் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் கார்பின் பாஷ் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.