என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்கள்: வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல்
    X

    டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்கள்: வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல்

    • கே.எல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்தார்.
    • இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 60வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 112 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 36 ரன் எடுத்தபோது டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்தார். இதனை தனது 224 இன்னிங்சில் கே.எல்.ராகுல் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்குமுன் விராட் கோலி 243 இன்னிங்சில் 8,000 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை கே.எல்.ராகுல் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    Next Story
    ×